search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருச்சி நீதிமன்றம்"

    திருச்சியில் 6 வயது சிறுமியிடம் பாலியல் வன்கொடுமை செய்த சைக்கிள் கடைக்காரருக்கு 7 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
    திருச்சி:

    திருச்சி பீமநகரை சேர்ந்த 6 வயது சிறுமி ஷெரீனா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). யு.கே.ஜி. படித்து வந்தாள். அவளது வீட்டின் அருகே திருச்சி கூனிபஜார் கோரி மேடு பகுதியை சேர்ந்த அப்பாஸ் என்கிற முகமது இஸ்லாம் (43) என்பவர் சைக்கிள் கடை நடத்தி வந்தார். பக்கத்து வீடு என்பதால் ஷெரீனாவிடம் அப்பாஸ் நன்றாக பழகி வந்துள்ளார். கடைக்கு அழைத்து சென்று தின்பண்டங்களும் வாங்கி கொடுத்துள்ளார்.

    அப்பாசுக்கு திருமணமாகி மனைவியும், 2 மகன்கள் உள்ள நிலையில், பெண் குழந்தை இல்லாததால் ஷெரீனாவிடம் மிகவும் பாசமுடன் பழகியுள்ளார். இதனால் அவளது பெற்றோர் அதனை கண்டுகொள்ளவில்லை. இந்த நிலையில் கடந்த 26.11.2017 அன்று ஷெரீ னாவை தனியாக அழைத்து சென்ற அப்பாஸ், அவளுக்கு ஐஸ்கிரீம் வாங்கி கொடுத்து பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.

    இதையடுத்து அழுது கொண்டே வீட்டிற்கு வந்த ஷெரீனாவிடம் அவளது பெற்றோர் கேட்டபோது, நடந்த விவரத்தை கூறவே அதிர்ச்சியடைந்தனர்.

    உடனே அப்பாசிடம் சென்று தட்டி கேட்டபோது, நடந்த சம்பவத்தை வெளியே சொன்னால் ஷெரீனாவை துண்டு துண்டாக வெட்டி கொன்று ஆற்றில் வீசி விடுவேன் என்று மிரட்டியுள்ளார். இதையடுத்து கடந்த 20.2.2018 அன்று திருச்சி கோட்டை மகளிர் போலீஸ் நிலையத்தில் ஷெரீனாவின் தந்தை புகார் செய்தார்.

    அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்பாசை கைது செய்தனர். வழக்கு விசாரணை திருச்சி மகிளா கோர்ட்டில் நடைபெற்று வந்தது. நீதிபதி மகிளினி முன்னிலையில் நடைபெற்று வந்த விசாரணை முடிவடைந்ததையடுத்து இன்று தீர்ப்பு கூறப்பட்டது.

    அதில் சிறுமியிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட அப்பாசுக்கு 7 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் 17 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது. மேலும் அரசு தரப்பில் வக்கீல் வெங்கடேசன் ஆஜராகி வாதாடினார்.
    முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை விமர்சித்து பேசியதாக தொடரப்பட்ட வழக்கில், மு.க.ஸ்டாலின் திருச்சி கோர்ட்டில் நேரில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி இன்று உத்தரவிட்டார். #MKStalin
    திருச்சி:

    திருச்சி முக்கொம்பு கொள்ளிடம் அணை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் உடைந்தது. இதையடுத்து தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், தி.மு.க. தலைவருமான மு.க. ஸ்டாலின் கடந்த 3.9.2018 அன்று முக்கொம்பு கொள்ளிடம் அணையை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறும்போது, தமிழக அரசின் அலட்சியத்தால்தான் முக்கொம்பு கொள்ளிடம் அணை உடைந்தது. எனவே அணை உடைப்புக்கு தார்மீகப் பொறுப்பேற்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும்.

    அணைகள் பாதுகாப்பு வி‌ஷயத்தில் அரசு அலட்சியம் காட்டுகிறது என்று கருத்து தெரிவித்திருந்தார். மேலும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை பற்றி அவதூறாக விமர்சித்ததாக கூறப்படுகிறது.

    இந்தநிலையில் திருச்சி மாவட்ட அ.தி.மு.க. அரசு வக்கீல் சம்பத்குமார், திருச்சி மாவட்ட முதன்மை அமர்வு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அதில் முதல்வரை அவதூறாக விமர்சித்த மு.க.ஸ்டாலின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். வழக்கை விசாரித்த மாவட்ட முதன்மை நீதிபதி குமரகுரு, திருச்சி கோர்ட்டில் இன்று மு.க.ஸ்டாலின் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார்.

    ஆனால் மு.க.ஸ்டாலின் இன்று வழக்கில் ஆஜராகவில்லை. அவரது தரப்பில் ஆஜரான வக்கீல் ஓம்பிரகாஷ், மு.க.ஸ்டாலின் சட்டமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்றுள்ளதன் காரணமாக ஆஜராக முடியவில்லை என்றும், வழக்கு விசாரணையை சென்னை கோர்ட்டில் நடத்த அனுமதி வழங்க வேண்டும் என்றும் வாதிட்டார். இதற்கு அரசு வக்கீல் சம்பத்குமார் ஆட்சேபனை தெரிவித்தார்.

    இதைத்தொடர்ந்து, வருகிற 8.3.2019 அன்று மு.க.ஸ்டாலின் திருச்சி கோர்ட்டில் கண்டிப்பாக நேரில் ஆஜராக வேண்டும் என்றும், திருச்சி கோர்ட்டில் ஆஜரான பிறகு சென்னை கோர்ட்டுக்கு வழக்கு விசாரணையை மாற்றுவது பற்றி முடிவு செய்யப்படும் என்றும் உத்தரவிட்டார்.

    முதல்வரை விமர்சித்து பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி. கே.எஸ்.இளங்கோவன் நேற்று திருச்சி கோர்ட்டில் ஆஜரானார் என்பது குறிப்பிடத்தக்கது. #MKStalin
    திருச்சியில் நடைபெற்ற கூட்டத்தில் தமிழக அரசு, முதல்வர் குறித்து அவதூறான தகவல்களை வெளியிட்டதாக தொடரப்பட்ட வழக்கில் மு.க.ஸ்டாலின் செப்.24ம் தேதி நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. #DMK #MKStalin
    திருச்சி:

    திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகிலுள்ள கலைஞர் அறிவாலயத்தில் கடந்த 21.6.2018 அன்று தி.மு.க. சார்பில் மாநில அளவிலான சிறுபான்மைப்பிரிவு நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    இதில் அப்போதைய தி.மு.க. செயல் தலைவரும், தற்போதைய தலைவருமான மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.


    அப்போது அவர் பேசுகையில், தமிழக அரசு பற்றியும், முதல்-அமைச்சர் குறித்தும் கடுமையாக விமர்சித்து கருத்துக்களை வெளியிட்டதாக கூறப்படுகிறது.

    இதுதொடர்பாக திருச்சி அரசு குற்றவியல் வழக்கறிஞர் சம்பத்குமார் கடந்த 11.7.2018 அன்று தமிழக அரசு குறித்தும், முதல்-அமைச்சர் பற்றியும் அவதூறான தகவல்களை கூறிய மு.க.ஸ்டாலின் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி திருச்சி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

    இந்த வழக்கு விசாரணை மாவட்ட முதன்மை நீதிபதி குமரகுரு முன்னிலையில் நடந்து வந்தது. இன்று மு.க.ஸ்டாலின் வழக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டு இருந் தது. ஆனால் அவர் ஆஜராகவில்லை.

    இதையடுத்து தி.மு.க. வழக்கறிஞர்கள் ஓம்பிரகாஷ், பாஸ்கர் ஆகியோர் ஆஜராகி கோர்ட்டில் மனு ஒன்றை அளித்தனர். அதில் இன்று சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி நினைவேந்தல் கூட்டம் நடைபெறுவதாகவும், அதில் தேசிய தலைவர்கள் கலந்துகொள்ள இருப்பதால் இன்றைய விசாரணைக்கு மு.க.ஸ்டாலினால் ஆஜராக முடியவில்லை என்றும் விளக்கம் அளித்திருந்தனர்.

    அதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி குமரகுரு, இந்த வழக்கின் விசாரணையை அடுத்த மாதம் (செப்டம்பர்) 24-ந்தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார். அப்போது மு.க.ஸ்டாலின் ஆஜராக வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

    இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் சம்பத் குமார் ஆஜரானார். #DMK #MKStalin
    ×